×

சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் 21.05.2024 முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் () பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:

· தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
· குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
· நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை:

· விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-4) தமிழ்-2, ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
· ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் – தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் (Soft copy & Hard Copy).
· இணைப்பு – படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் (Soft copy & Hard Copy).

எனவே, அனைத்து மாவட்டங்களிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்கள், இணையதளத்தின் மூலம் வருகின்ற 20.06.2024 க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

The post சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Social Worker Awards ,of ,Independence Day ,Chennai ,Government of Tamil Nadu ,Women's Advancement Awards ,Dinakaran ,
× RELATED சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது