×

கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கினர்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கினர். ஆற்றில் சிக்கிய 5 பேரை மீட்க பெரியகுளத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். சின்னூர், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல கல்லாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். பெரியகுளத்துக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது 5 பேரும் ஆற்றில் சிக்கினர்.

The post கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kallaru river ,Kodaikanal ,Periyakulam ,Chinnoor ,Periyur ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை