×

தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார். தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித் ஷாவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும். வெறுப்பை பரப்பும் வகையில் பேசி வரும் மோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் தூங்குகிறது. தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி மோடி பேசுவார். மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

 

The post தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Selvaperundagai Kattam ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Selvaperunthakai ,Satyamurthy Bhavan ,Chennai.… ,Selvaperunthakai Kattam ,
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!