×

பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மே 22: தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் நடேசன், மேற்பார்வையாளர்கள் வனிதா, பிரபாகர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் உழவர் சந்தை, காய்கறி கடைகளில் நேற்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் உள்ளதா என சோதனை நடத்தினர். அதில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்கை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ₹1800 அபராதம் விதித்து வசூலித்தனர்.

The post பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Manokaran ,Natesan ,Vanitha ,Prabhakar ,Dinakaran ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு