×

நரசிம்ம ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி, மே 22: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோயிலில் 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. 16ம் தேதி அன்னபட்சி வாகனம், 17ம் தேதி சிம்ம வாகனம், 18ம் தேதி ஆஞ்சநேயர் வாகனம், 19ம்தேதி சேஷ வாகனம், 20ம் தேதி கருட வாகனத்திலும் நரசிம்மர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவம் ஆகியவை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, யானை வாகனத்தில் நகர்வலம் நடந்தது. தொடர்ந்து, குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றது.

The post நரசிம்ம ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Narasimha Jayanti Festival Krishnagiri ,annual ,Brahmotsava festival ,Lakshmi Narasimha Sami Temple ,Krishnagiri Old Petty ,16th Annapatsi Vahanam ,Simma ,Vahanam ,Anjaneyar Vahanam ,Narasimha Jayanti Festival ,
× RELATED பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா