×
Saravana Stores

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் உரத்தொழிற்சாலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டு விசாரணை நடத்தியது. அப்போது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அமோனியா கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஐஐடி, மாசுகட்டுபாட்டு வாரியம், சிபிசிஎல் போன்ற குழுக்கல் அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் அறிக்கையில், 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எண்ணூர் பகுதியில் வேறு எந்த நிறுவனமும் அமோனியாவை பயன்படுத்தாத நிலையில், கோரமண்டல் நிறுவனம் இதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

அமோனியா கசிவை தடுக்க அந்த நிறுவனத்தின் உள்ளே மட்டும் தானியங்கி கருவைகள் பொறுத்தப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் தானியங்கி கருவிகள் பொறுத்தப்படவில்லை என மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்தது. அமோனியா கசிவுக்கு காரணமான விதிகளை மதிக்காத கோரமண்டல் போன்ற நிறுவனங்களை தமிழகத்தில் இனியும் செயல்பட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நிறுவனம் சார்பில்: கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிறுவனத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்றது இல்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 35 தானியங்கி கருவிகள் நிறுவனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கபட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுகொண்டிருந்த போது இடைக்கால நிவாரணமாக சுமார் ரூ.5 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என் ஏற்கனவே பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பை பசுமைத்தீர்ப்பாயம் வழங்கியது. அதில், மாசுகட்டுப்பாட்டு வாரியம், நிபுணர் குழு உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த உரிய ஆய்வு செய்து, உரிய அனுமதி வாங்கிய பின்னரே கோரமண்டல் உர தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்று பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுருத்தப்பட்டுள்ளது.

The post அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் உரத்தொழிற்சாலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Southern Green Tribunal ,Coramantal ,Chennai ,South Zone Green Tribunal ,Coramandal Fertilizer Plant ,Tolur, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது