×

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

தேனி, மே 21: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள வள்ளுவர் காலனி முதல் தெருவில் குடியிருப்பவர் முருகன். கொத்தனாரான இவருக்கு சுவேதா, ரூபிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சுவேதாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. ரூபிதா தேனியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 350 மதிப்பெண்கள் பெற்றார். 11ம் வகுப்பில் சேர்வதற்கு கல்வி கட்டணம் வழங்குமாறு ரூபிதா பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவரது பெற்றோர் அடுத்த வாரம் பணம் தருவதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரூபிதா நேற்று காலை வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரூபிதா தந்தை முருகன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Theni ,Murugan ,First Street, Valluvar Colony, ,Karuvelnayakanpatti ,Theni Collector's Office ,Swetha ,Rupita ,Rupita Theni ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...