×

வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

 

தேனி, மே 21: தேனி மாவட்டம் கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து வீரன் மகன் கிருஷ்ணகுமார்(27). கடந்த 15ஆம் தேதி குள்ளப்ப கவுண்டன்பட்டியில் உள்ள கூடலூரை சேர்ந்த லட்சம் மகள் பரிமளா என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வேலி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் மனைவி ஆனந்தி கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணகுமார் பிரேதத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தோட்ட உரிமையாளர் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பிரேதத்தை வாங்காமல் கிருஷ்ணகுமார் உறவினர்கள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இறந்து போன கிருஷ்ணகுமாரின் மனைவி ஆனந்தி மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கலெக்டர் கார் நிற்கும் போர்டிகோ அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேனி தாசில்தார் ராணி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Theni ,Krishnakumar ,Muthu Veeran ,Kullappa Countan Patti Bhattalamman Kovil Street ,Gudalur, Theni District ,Lakh ,Parimala ,Gudalur ,Kullappa Kauntanpatti ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...