×

சிவகங்கையில் கன மழை

 

சிவகங்கை, மே 21: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் சிவகங்கையில் 68 மி.மீ மழை பெய்தது.

கடந்த இரண்டு நாட்களில் காரைக்குடியில் 74மி.மீ, மானாமதுரையில் 40 மி.மீ, தேவகோட்டையில் 36.4மி.மீ, காளையார்கோவிலில் 12.6மி.மீ, திருப்பத்தூரில் 11.8மி.மீ, இளையான்குடியில் 11 மி.மீ, திருப்புவனத்தில் 2.6மி.மீ, சிங்கம்புணரியில் 7மி.மீ மழை பெய்துள்ளது. நேற்று பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது.

The post சிவகங்கையில் கன மழை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது