×

திருவிழா கூட்ட நெரிசலில் பெண் மீது விழுந்து சில்மிஷம் 4 பேர் அதிரடி கைது கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், மே 21: கே.வி.குப்பம் அருகே திருவிழா கூட்ட நெரிசலில் பெண் மீது விழுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த செஞ்சி கிராமத்தில் நேற்று முன்தினம் கெங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கோயிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 17ம் தேதி அமைதி கூட்டம் தாசில்தார் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் எவ்வித பிரச்னையும் செய்யக்கூடாது, தண்டு மாலை அணிவிக்கக்கூடாது என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவுரைகளை மீறி பக்தர்கள் தண்டு மாலையுடன் கூட்டமாக கோயிலுக்குள் வந்தனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தபடி கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியாமல் நெரிசலில் சிக்கினர். இதனால் அங்கு தள்ளுமுன்ளு ஏற்பட்டு, பக்தர்கள் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டனர். அப்போது ஒருகும்பல் அங்கிருந்த பெண் மீது விழுந்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணமடங்கி போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து நேற்று பிரகாஷ்(42), சதீஷ்குமார்(28), லட்சுமணன்(24), நவீன்(24) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருவிழா கூட்ட நெரிசலில் பெண் மீது விழுந்து சில்மிஷம் 4 பேர் அதிரடி கைது கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Kengaiyamman ,Senchi village ,KV Kuppam, ,Vellore district ,Chilmisham ,
× RELATED பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2...