×

இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மே 21: கெலமங்கலம் அடுத்த அஞ்செட்டி துர்க்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 18ம் தேதி, வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதில், கெலமங்கலம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த அமரேஷ் என்பவர், தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் கடத்தல்; வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Anchetty Durgam ,Kelamangalam ,
× RELATED கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது