×

மழைநீர் பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ

 

மதுரை, மே 20: மதுரையில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதன்படி கோரிப்பாளையத்தில் இருந்து செல்லூர் செல்லும் சாலையில் பால வேலைகள் நடைபெறும் பகுதியில் தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்திலும் தண்ணீர் தேங்கியது. சுமார் 6 அடிக்கும் அதிகமாக ஆழமுள்ள இந்த பள்ளத்து நீரில் தெற்கு வாசலில் இருந்து வந்த ஆட்டோ பாய்ந்தது.

இதில் தெற்கு வாசலில் இருந்து ஆனையூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் ஓட்டுநர் உள்பட அனைவரையும் மீட்டனர். பாலம் கட்டுமான பணிக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்த சாலையில் ஆட்டோ வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

The post மழைநீர் பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ appeared first on Dinakaran.

Tags : Madurai ,Koripalayam ,Sellur ,
× RELATED திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை...