- கசவலா
- தமிழ்நாடு
- வெட்டர்
- தஞ்சாவூர்
- புத்தூர் ஊராட்சி
- தஞ்சாவூர் மாவட்டம்
- கசவளநாடு
- தினகரன்
- கண்டிதம்பட்டு, காச வளநாடு புதூர்
- கசவல நாட்டு வெட்டர்
- தின மலர்
தஞ்சாவூர்,மே20: தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புத்தூர் ஊராட்சி வெட்டாறு பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது. தஞ்சாவூரை அடுத்த கண்டிதம்பட்டு, காச வளநாடு புதூர் பகுதியில் சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே அவற்றை அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் படி அந்தப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் நேற்று அகற்றப்பட்டது. மேலும் அங்க கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளின் பேட்ச் நம்பர், இன்சுலின் ஊசிகவரில் ஒட்டப்பட்டிருந்த சுயவிவரம் கொண்டு எந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டது என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த மருத்துவ கழிவுகள் எந்த மருத்துவமனை, ஆய்வகம், தனியார் கிளினிக் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டால் அந்த நிர்வாகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். இந்த மருத்துவ கழிவு அகற்றும் பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல், மணிகண்டன், காச வளநாடு புத்தூர் ஊராட்சி செயலர் விஜயா, கண்டிதம்பட்டு ஊராட்சி செயலர் அன்பரசன் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. இந்த நிலையில் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், அவற்றை உடனே சரி செய்த மாவட்ட சுகாதார அலுவலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.
The post காசவளநாடு வெட்டாறு பகுதியில் அன்றும் appeared first on Dinakaran.