- ஜல்லிக்கட்டு
- திருவிழா
- திருமதி
- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
- எம்ஆர்
- விகாசி திருவிழா
- நாச்சியம்மன் கோயில்
- ரங்கீயம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- கோயில் திருவிழா
திருமயம், மே 20: திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் அழகிய நாச்சிஅம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவிழாவை முன்னிட்டு ஊரார்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். மாவட்ட நிர்வாகம் அனுபதி அளித்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகென பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு நேற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னமராவதி, திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் காளைகளை அடக்க 60 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்டிஓ ஐஸ்வர்யா கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக ஊர் கோயில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.