×

2,160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு; 24 பேர் மீது வழக்கு: மாவட்டம் முழுவதும் ரெய்டு

வேலூர், மே 20: வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 135 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணாம்பட்டு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் லட்சுமிவெடி வனப்பகுதியில் நடத்திய சோதனையில் அங்கு 1,100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. குடியாத்தம் மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் நடத்திய சோதனையில் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதேபோல் மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 135 டாஸ்மாக் மதுபாட்டில்களும், ₹1,750 மதிப்புடைய 175 கிராம் கஞ்சா பொட்டலங்களும், குட்கா பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 20 பேர் மீது மதுவிலக்கு வழக்குகளும், 3 பேர் மீது கஞ்சா வழக்கும், ஒருவர் மீது குட்கா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post 2,160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு; 24 பேர் மீது வழக்கு: மாவட்டம் முழுவதும் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,SP Manivannan ,Peranampatu ,Circle ,Dinakaran ,
× RELATED கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐடி...