×

ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்

போளூர், மே 20: வேலூரில் வியாபாரம் செய்ய சென்றபோது, போளூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவும், தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் பூண்டு வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா மகன் அசான்பாஷா(27). கடலாடி கீழ் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிச்செல்வன்(27). பூண்டு வியாபாரிகள். இவர்கள் இருவரும் லோடு ஆட்டோவில் பூண்டு ஏற்றிக்கொண்டு ஊர்ஊராக சென்று தினமும் வியாபாரம் செய்வார்களாம். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் ேலாடு ஆட்டோவில் பூண்டுகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்காக புறப்பட்டனர். வேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் பூண்டு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டு வேலூர் நோக்கி வந்தனர்.ெதாடர்ந்து, போளூர் பைபாஸ் சாலையில் இரவு 11 மணியளவில் வந்தபோது, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ்சும் லோடு ஆட்டோவும் ேநருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஆட்ேடா கவிழ்ந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோவின் இடிபாட்டில் சிக்கிய அசான்பாஷா, வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து அசான்பாஷாவின் தந்தை சாதிக்பாஷா கொடுத்த புகாரின்பேரில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிந்து, விபத்து நடந்தவுடன் தலைமறைவாகிவிட்ட தனியார் பஸ் டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் 2 வியாபாரிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Polur ,Bolur Bypass Road ,Vellore ,Thiruvannamalai District, Kalasapakkam ,Pudupettai ,
× RELATED செம்மரம் கடத்திய தந்தை, மகன் கைது: 3 டன் செம்மரம் பறிமுதல்