×

அண்ணாமலையார் கோயில் ஊழியர் விபத்தில் பலி: மாட்டு வண்டி மீது பைக் மோதல்

திருவண்ணாமலை, மே 20: திருவண்ணாமலை அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் அண்ணாமலையார் கோயில் ஊழியர் பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் என்ஜிஓ நகர், நேரு வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் வேல்முருகன்(46). திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் டிக்கெட் கவுண்டரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார். திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை பவித்திரம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது இவரது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.உடனடியாக, அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து வெறையூர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி நித்யா கொடுத்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அண்ணாமலையார் கோயில் ஊழியர் விபத்தில் பலி: மாட்டு வண்டி மீது பைக் மோதல் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple ,Tiruvannamalai ,Velmurugan ,Saminathan ,Nehru Road ,Tirukovilur NGO Nagar, Kallakurichi District ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான...