- மகா கும்பாபிஷேக்
- செரன்மகாதேவி உதிராசெல்லியம்மன் கோயில்
- Veeravanallur
- மகா கும்பாபிஷேக விழா
- சேரன்மகாதேவி
- உதிராசெல்லியம்மன் கோயில்
- மகா கும்பாபிஷேக்
வீரவநல்லூர், மே 20: சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. சேரன்மகாதேவி பஸ்நிலையம் அருகில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உத்திராசெல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 17 காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கன்யா பூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும், 11 மணிக்கு துர்கா சூக்த ஹோமம், அஸ்திர ஹோமம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் இரவு 10 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. 18ம்தேதி காலை 8 மணிக்கு 2வது கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3வது கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 4வது கால யாகசாலை பூஜை முடிந்து, காலை 7 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
The post சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.