×

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கோவை, மே 19: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு வார இறுதி நாட்களை முன்னிட்டு நேற்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகளும், கோடை கால சிறப்பு இயக்கமாக கோவையில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 10 பேருந்துகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். மேலும், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகிறது.

The post கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Madurai ,Theni ,Trichy ,Salem ,50 ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு வாபஸ்