×

கன்னையா குமார் மீது தாக்குதல்; தோல்வி பயத்தால் பாஜ வன்முறையை தூண்டுகிறது: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். பாஜ வேட்பாளராக தற்போதைய மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி நிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் புதிய உஸ்மான்பூரில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கன்னையா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வௌியே வந்த கன்னயைா குமார் மீது மர்ம நபர்கள் சிலர் கருப்பு மையை தௌித்து, சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுதொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கன்னையா குமார் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டர் பதிவில், “தோல்வியை முன்கூட்டியே தெரிந்து கொண்ட வடகிழக்கு டெல்லி பாஜ வேட்பாளர் மனோஜ் திவாரி இப்போது வன்முறையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் காந்தியவாதி, அது கோட்சேவாதி இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஜூன் 4ம் தேதி வௌியேற்றப்படுவார்கள் என்பது தெரிந்து பொதுவான எம்.பி. முதல் பிரதமர் மோடி வரை, வடக்கு முதல் தெற்கு வரை பாஜ பதற்றமாக உள்ளனர்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post கன்னையா குமார் மீது தாக்குதல்; தோல்வி பயத்தால் பாஜ வன்முறையை தூண்டுகிறது: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kanhaiya ,BJP ,Congress ,New Delhi ,Kanhaiya Kumar ,India Alliance ,North East Delhi ,Lok Sabha ,Manoj Tiwari ,Aam Aadmi Party ,New Osmanpur, India ,Kannaya ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி