×

பாஜ பயங்கரவாதிகளின் கட்சி: பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி

பெங்களூரு: பாஜ பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ளார். நகர்ப்புற நக்சல்களின் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துவருகிறார். இதற்கு கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அவர் கூறும்போது,’ மோடி எப்போதும் காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல் கட்சி என்று விமர்சிக்கிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது கட்சி எப்பேர்ப்பட்டது? பாஜ பயங்கரவாதிகளின் கட்சி; கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்ட மோடிக்கு உரிமையே கிடையாது’ என்று விமர்சித்திருந்தார். பாஜவை பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே விமர்சித்திருப்பது பாஜவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

The post பாஜ பயங்கரவாதிகளின் கட்சி: பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி appeared first on Dinakaran.

Tags : BJP Party ,PM Modi ,BENGALURU ,Karke ,Modi ,BJP ,Congress party ,Naxals ,Congress ,President ,Mallikarjuna ,Kalaburki, Karnataka ,
× RELATED சொல்லிட்டாங்க…