×

புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம் மாவட்டம் தோறும் 150 போலீசாருக்கு பயிற்சி வேலூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும்

வேலூர், மே 18: வேலூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் புதிய சட்ட திருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று மாவட்டந்தோறும் 150 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு இயற்றிய 3 புதிய சட்டங்கள், பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் 2023 ஆகியவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய சட்ட திருத்தங்களின் விதிமுறைகள் என்ன? அதில் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது.

போலீசார், புகார்தாரர் என்று யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சட்டத்திருத்தங்கள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில் சென்னை காவலர் பயிற்சி பள்ளி மூலம், மாவட்டத்தில் உள்ள 50 போலீசாருக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், தலைமைகாவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் மாவட்டங்கள் தோறும் 150 போலீசாருக்கு புதிய சட்டதிருத்தங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மாவட்டங்களில் உள்ள மற்ற காவலர்களுக்கு புதிய சட்ட திருத்தங்கள் தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம் மாவட்டம் தோறும் 150 போலீசாருக்கு பயிற்சி வேலூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vellore district ,Vellore ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...