×

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஓய்வு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். முதல் தலைமுறை வழக்கறிஞரான நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா கடந்த 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தன் 5 ஆண்டுகால பதவி காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 90க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கி உள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னதாக ஏ.எஸ்.போபண்ணா நேற்றுடன் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போபண்ணாவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதுகுறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறும்போது, “எனது பார்வையில் நீதிபதி போபண்ணா ராகுல் டிராவிட்டுக்கு நிகரானவர்” என புகழாரம் சூட்டி உள்ளார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Bopanna ,New Delhi ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...