×

தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித வரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது. இதனால் ஏற்பட்ட சமூகநீதிப் புயலால் மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,CHENNAI ,Selvaperundagai ,Tamil Nadu Congress ,Selvaperunthagai ,
× RELATED மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால்...