×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவி அசத்தல்

 

தொண்டாமுத்தூர், மே 17: கோவை ஆலாந்துறை முகாசிமங்கலம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் மௌலிகா. இவரது தாயார் சசிகலா (36). தனியார் மில்லில் தினக்கூலி வேலை செய்து வருகிறார். மௌலிகா நாதேகவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து உள்ளார்.

இது குறித்து மாணவி மௌலிகா கூறுகையில், ‘‘பிளஸ்-1 வகுப்பில் பயோ மேக்ஸ் குரூப்பில் சேர தீத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் செய்து உள்ளேன். டாக்டர் ஆகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அம்மா தினக்கூலியாக இருந்து சிரமப்பட்டு எங்களை படிக்க வைக்கின்றனர். 494 மதிப்பெண் பெற உதவிய ஆசிரியர்கள் சக மாணவ மாணவிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Maulika ,Mukasimangalam ,Alandara, Coimbatore ,Sasikala ,Nathekauntanputhur Govt. High School ,Dinakaran ,
× RELATED கோவை பாரதி பல்கலை வளாகத்தில் யானையை...