×

மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது குடியாத்தம் அருகே கடையின் வெளியே தூங்கிய

குடியாத்தம், மே 17: குடியாத்தம் அருகே கடையின் வெளியே தூங்கிய மூதாட்டி தலையின் மீது கல்லை போட்டு கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் பகுதியில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. அங்குள்ள கடைகளின் வெளியே வீடு இல்லாதவர்கள் சிலர் இரவில் தூங்குவது வழக்கம். அதன்படி, கடந்த மாதம் ஒரு அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை போட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் மூதாட்டி துடிதுடித்து தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடந்தினர். அதில் அவர் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்த தரனி(45) என்பதும், திருமணமாகாமல் இரவு நேரங்களில் கடைகளின் வெளியே படுத்து உறங்கி வந்துள்ளார். அப்போது உயிரிழந்த மூதாட்டி இவரை சபித்து அவரிடம் இருந்த ₹1000 பணத்தை திருடியதாகவும், இதன் காரணமாக அவரின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தரணியை கைது செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது குடியாத்தம் அருகே கடையின் வெளியே தூங்கிய appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Gudiatham, Taranampet bazaar ,Dinakaran ,
× RELATED மழையால் வீட்டின் தூண் இடிந்து...