×

கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தோட்டக்கலை துறையினர் தகவல் கே.வி.குப்பம் வட்டாரத்தில்

கே.வி.குப்பம், மே 17: கே.வி.குப்பம் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்து, காலநடைகளும் உயிரிழந்தன. அதன்படி கே.வி.குப்பம் வட்டாரத்தில் பெய்த கன மழையால் நெல்பயிர், சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள், 1 ஏக்கரில் பப்பாளி என ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கே.வி.குப்பம் வட்டார தோட்டக்கலை துறைக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கள ஆய்வு செய்து, சேதமடைந்த மரங்கள் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயகுமார், ஆர்.ஐ, விஏஓ உள்ளிட்ட வருவாய் துறையினர் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக கள ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேல்மாயில், கீழ் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்யும் பணி நடந்தது. இந்த அறிக்கையின்‌ முடிவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கபடும் என்றும், இழப்பீடு பெற பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி புத்தகம், பாதிக்கப்பட்ட பயிர்களின்‌ புகைப்படம் கூடிய ஆவணங்களை விஏஓவிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என்றும், மேலும் தகவல்களுக்கு கே.வி.குப்பம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அனுகலாம் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தோட்டக்கலை துறையினர் தகவல் கே.வி.குப்பம் வட்டாரத்தில் appeared first on Dinakaran.

Tags : Horticulture Department ,KV Kuppam ,Horticulture ,Vellore district ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...