×

சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நடைபெறுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. ற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடப்பதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளப்பொம்மன் கிராமத்தில் பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில்கள் உள்ள நிலையில் மே 19ம் தேதி திருவிழா நடத்த இக்கோயில்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 80க்கு மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்கவும், கழுமரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அனுமதிப்பத்தில்லை என கூறி மே 19ம் தேதி நடக்க இருக்கும் திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபடும் வகையில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு வந்தபோது, “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நடைபெறுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பினை பாதுகாக்க நீத்திமன்றம் உள்ளது. தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடப்பதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

ஒரு மனிதன் சக மனிதனிடம் பாகுபாடு பார்ப்பது ஏற்புடையது அல்ல. திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருவிழாவின்போது எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னையும் வருவாய் துறையினரும், காவல் துறையினரும் பார்த்துக்கொள்ள வேண்டும்” என நீதிபத்திகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Maduraikille ,Dindigul District ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...