- ஸ்ரீவென்கடேஸ்வரா ஹையர் செகண்டரி பள்ளி
- உத்தகுதிரா
- கோபி. கோபி
- வெங்கடேஸ்வரா இண்டர்நேஷனல்
- கோபி
- அமைச்சர்
- கே.சி.கருப்பணன்
- ஓத்குதீரா
- கோபி?. திருக்குறள்
கோபி, மே 16: கோபி அருகே ஒத்தக்குதிரையில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா சர்வதேச மேல்நிலைப்பள்ளியில் 10, 12ம் வகுப்பில் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தகுதிரையில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதில் 12ம் வகுப்பு மாணவி கீர்த்தனா 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தீபக் என்ற மாணவர் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தார். சங்கீதா மற்றும் நன்சிகா ஆகியோர் 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
அதேபோல 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் அகிலேஷ் 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி நேத்ரா 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மாணவி வர்ஷா 500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.சி கருப்பணன் எம்.எல்.ஏ பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ஜிபி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவர் பி. வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர்கள் கணேசன், செங்கோட்டையன், ஜோதிலிங்கம், மோகன் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post கோபி அருகே ஒத்தக்குதிரையில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.