கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அர்சத்: கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறேன். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நாங்கள் தற்போது பயின்று வரும் பள்ளி படிப்பையும் சேர்த்து கூடுதலாக தொழில் நுட்பம் சார்ந்த எங்களது எதிர்காலத்திற்கு தேவையான படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட கூடுதல் தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை படிப்பதற்கென தனியாக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் என்ற திட்டத்தை செயல்படுத்தி எங்களுக்கு எதிர்கால வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். நான் முதல்வன் திட்டம் எங்களது எதிர்கால வாழ்க்கையின் அடித்தளமாக அமையும். இவ்வகையான வாய்ப்புக்களை நாங்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே கற்பதற்கான வழிவகைகளை உருவாக்கித் தந்து, தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தி எங்களுக்கான முதலமைச்சராக திகழ்ந்து வரும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மாணவ-மாணவிகள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றனர்.
பல்லடம், மே 16: ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை வழங்க வேண்டும் என்று திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டுக்கமிட்டி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டுக்கமிட்டி கூட்டம் பல்லடம் க.அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. பல்லடம் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார் கண்ணம்பாளையம் சங்க தலைவர் செல்வக்குமார், மங்கலம் சங்க செயலாளர் கோபால், 63 வேலம்பாளையம் சங்க தலைவர் பத்மநாபன், பல்லடம் சங்க துணைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துக்குமாரசாமி வரவேற்றார்.
கூட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் முன்னிலையில் பேசி ஒப்புக்கொண்ட கூலியை தற்போது வெகுவாகக் குறைத்து வழங்குகிறார்கள். ஏற்கனவே, 2014ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை விட குறைத்து வழங்குவதை விசைத்தறியாளர்கள் சங்க கூட்டுக் கமிட்டி வன்மையாகக் கண்டிப்பதோடு குறைத்த கூலியை உடனடியாக கொடுக்க வேண்டும். ஒப்பந்த கூலி பிரச்னை குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து பேசுவது என்றும், விசைத்தறிகள் இயங்குவதற்கான மூலப்பொருட்களான பாவு-நூல் சரி வரக் கிடைக்காததாலும் கிடைத்தாலும் அதை ஓட்டி கிடைக்கின்ற கூலி குறைக்கப்பட்டதாலும் 30 சதம் விசைத்தறிகள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு விலைக்கு போடப்பட்டுவிட்டது.
இந்த நிலை மாற ஒன்றிய, மாநில அரசுகள் மீதியுள்ள 70 சதவீத விசைத்தறிகளையும் அதைச்சார்ந்த விசைத்தறியாளர்கள் குடும்பங்களையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளின் துறைகளான தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ராணுவ துறைகளுக்கு தேவையான சீருடைகள் மற்றும் பள்ளிச் சீருடைகள் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் என அனைத்து வகையான துணிகளையும் விசைத்தறிகளில் மட்டுமே துணி நெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன விசைத்தறிகளின் வரவால் விசைத்தறித் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதால் கைத்தறித் துணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட ரக ஒதுக்கீட்டை போல விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்து விசைத்தறித் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் 100 சதம் மானியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 32,258 மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.