- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- பழனி
- அவளூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்
- Manavalanagar
- பொலிவாக்கம் சத்திரம்
- பொலிவாக்கம்
திருவள்ளூர், மே 16: காஞ்சிபுரம் மாவட்டம், அவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(58). இவர் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் போளிவாக்கம் சத்திரத்தில் குறைந்த மின் அழுத்த கம்பியை அவ்வழியாக சென்ற வாகனம் தட்டியதில் அறுந்து விழுந்தது. இதுகுறித்து போளிவாக்கம் சத்திரம் பகுதிவாசிகள் மணவாளநகர் துணை மின்நிலையத்திற்கு தகவல் அளித்தும் முறையான பதில் அளிக்காமல், யார் செத்தால் எனக்கென்ன என அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்பாதை ஆய்வாளர் பழனி, கம்பியாளர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு பழுது பார்க்க சென்றனர். தகவலறிந்த போளிவாக்கம் பகுதிவாசிகள் 20க்கும் மேற்பட்டோர் அலட்சியமாக பதிலளித்த மின்வாரிய அதிகாரி வரவேண்டும் எனற ஊழியர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து மின்பாதை ஆய்வாளர் பழனி கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மணவாளநகர் துணை மின் நிலையத்தில் பணியாளர்களை தாக்கியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில் போளிவாக்கம் துணை மின் நிலையத்தில், தங்கள் பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தாக்கியதாக ஒருவரை அழைத்துச் சென்று மின்வாரிய அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
The post திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் மின் ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.