செராம்பூர்: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் மீட்டெடுப்போம்’ என அமித்ஷா கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘2019ல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதி திரும்பி உள்ளது. இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் நடப்பதை பார்க்கிறோம். ‘விடுதலை’ என்கிற முழக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது. முன்பு இங்கு கற்கள் வீசப்பட்டன. இப்போது அங்கு கற்கள் வீசப்படுகிறது. மணிசங்கர் அய்யர் (காங். மூத்த தலைவர்) போன்ற தலைவர்கள், பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாகவும், அதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது கை வைக்கக் கூடாது என்கிறார்கள். நான் சொல்கிறேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் மீட்டெடுப்போம். ஊடுருவல்காரர்கள் வேண்டுமா அல்லது அகதிகளுக்கு சிஏஏ வேண்டுமா என்பதை மேற்கு வங்க மக்கள் தீர்மானிக்க வேண்டும்’’ என்றார்.
The post இந்தியாவின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்போம்: அமித்ஷா பிரசாரம் appeared first on Dinakaran.