×

திருட வந்த இடத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் இரு கைகளையும் புண்ணாக்கிய திருடன்: சினிமா பாணியை மிஞ்சிய திருட்டு!!

சென்னை: சேப்பாக்கத்தில  L அன் T  நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் திருடமுயன்றவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். தவம் படத்தில் கீறிபிள்ளை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்த பாணியில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில்   L அன் T நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் குடோனில் பலகோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிகல் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை மூன்று பேர் திருட்டு தனமாக நுழைந்து எலக்ட்ரிகல் உபகரணங்களை திருட முயற்சித்தனர். அப்போது சுவிட்ச் பாக்சில்  கைவைத்த ஒருவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு இரண்டு கைகளும் கருகிய நிலையில், அவருடன் வந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்ட நபரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே காவல்துறையினரின் விசாரணையில் திருட வந்தவர் சென்னை, அன்னை சத்யா நகரை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. தப்பியோடிய அவரது நண்பர்கள் பாலாஜி, விஜய் என்பதையும் அறிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post திருட வந்த இடத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் இரு கைகளையும் புண்ணாக்கிய திருடன்: சினிமா பாணியை மிஞ்சிய திருட்டு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,L&T ,Chepakkam ,
× RELATED சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை