×
Saravana Stores

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

கோவை, மே 15 : கோவை மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 7ம் தேதி வரை 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராம் அசிஸ்டன்ட், டெக்ஸ்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், ஸ்மார்ட் ஹெல்த் கேர், தையல் டெக்னாலஜி, இன்ஸ்ட்டூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெக்னிசீயன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், மாத பயிற்சியில் ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை, புதுமை பெண்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000, மிதிவண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவதுடன், நவீன தொழிற் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு தொழிற்சாலை மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி 98651-28182, 94990-55692, 88381-58132, 94422-39112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore Women Government Vocational Training Center ,Coimbatore ,Women's Government Vocational Training Center ,District Employment Office ,Mettupalayam Road, Coimbatore ,Dinakaran ,
× RELATED உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு