×

செந்நிறமாக காட்சியளிக்கும் குட்டை: மருதமலையில் சூரசம்ஹார விழா

தொண்டாமுத்தூர், நவ.8: கோவை அருகே மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாளான நேற்று காலை சண்முக அர்ச்சனை நடந்தது. மாலை 3:30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில், சூரசம்ஹாரத்திற்காக அம்மனிடம் சுப்பிரமணிய சுவாமி சக்தி வேல் பெற்றார். அதன்பின், சூரபத்மன், சிங்கமுகாசுரன், பானுகோபன், தாரகாசுரன் ஆகியோரை வதம் செய்தார்.

பின்னர் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 4 மணிக்கு சாந்தி அபிஷேகம், சண்முகார்ச்சனை நடைபெற்றது. இன்று எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மருதமலைக்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இன்று அனுமதிக்கப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரசம்ஹார நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post செந்நிறமாக காட்சியளிக்கும் குட்டை: மருதமலையில் சூரசம்ஹார விழா appeared first on Dinakaran.

Tags : Red ,Surasamhara Festival ,Marudamala ,Thondamuthur ,Kanda Sashti ,Marudamalai Subramaniya Swami Temple ,Sami ,Yakasala Pooja ,Dinakaran ,
× RELATED கோலாலம்பூரில் இருந்து விமானத்தில்...