- திருவள்ளூர்
- தாம்பரம்
- கிளாம்பச்சம்
- கிளம்பாக்கம்
- புதிய பேருந்து நிலையம்
- Thambaram
- சென்னை கோயம்புத்தூர்
- வண்டலூர்
- கிளம்பகன்
- திருவள்ளூர்
திருவள்ளூர், மே 15: திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வழியாக, கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையத்திற்கு, நேரடி மாநகர பேருந்துகள் இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வோர், இதுவரை கோயம்பேடு சென்று அங்கிருந்து தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.
இதற்காக, திருவள்ளூரில் இருந்து கோயம்பேட்டிற்கு ஏராளமான மாநகர பேருந்துகள் மற்றும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தென்மாவட்டங்களுக்குச் செல்வோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் திருவள்ளூரில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு நேரடி மாநகர பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் திருவள்ளூரில் உள்ள தென் மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் பகுதியில் உள்ள தென் மாவட்ட பயணிகள் கூறியதாவது: தற்போது, திருவள்ளூரில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு நேரடி மாநகர பேருந்துகள் இல்லாததால் பூந்தமல்லி, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் என 3 வழித்தட பேருந்துகளில் மாறிமாறி செல்ல வேண்டிய நிலமை உள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். இந்த அசவுகரியத்தை தவிர்க்க, திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வழியாக, கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக மாநகர பேருந்து மற்றும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும், கிளாம்பக்கத்தில் இருந்து வண்டலுார் சுற்று சாலை, நெமிலிச்சேரி வழியாக திருநின்றவூருக்கும் நேரடி மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தெ ன்மாவட்டங்களுக்குச் செல்வோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் திருவள்ளூரில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு நேரடி மாநகர பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் திருவள்ளூரில் உள்ள தென் மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
The post திருவள்ளூரிலிருந்து தாம்பரம் வழியாக கிளாம்பாக்கத்துக்கு நேரடி மாநகர பேருந்து இயக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் 3 பேருந்துகளில் மாறிமாறி செல்லவேண்டிய அவலம் appeared first on Dinakaran.