×
Saravana Stores

நத்தம்பேடு பகுதியில் ₹5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், மே 15: திருவள்ளூர் அடுத்த நத்தம்பேடு பகுதியில் ₹5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை வட்டாட்சியர் அதிரடியாக மீட்டார். திருவள்ளூர் தாலுகா, திருவூர் குறுவட்டம், நத்தமேடு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் மொத்த பரப்பு 173.65 ஹெக்டேர்ஸ் ஆகும். பெரிய ஏரி வகைப்பாடு கொண்ட நிலத்தில் புதிதாக குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரிலும், வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தலிலும் திருவள்ளூர் வருவாய் கோட்ட அலுவலர் கற்பகம் மேற்பார்வையில் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் வருவாய்த் துறையினர் நத்தம்பேடு ஏரியினை அளவீடு செய்தனர்.

அப்போது ஏரியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சிமெண்ட் கல் மூலம் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அதில் ஒரு ஓலை குடிசை அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு கம்பி வேலி மற்றும் குடிசை ஆகியவற்றை அகற்றி ₹5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டனர். திருவூர் வருவாய் ஆய்வாளர் மகேஷ், நில அளவையர் ராஜசேகர், பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல், நத்தம்பேடு கிராம நிர்வாக அலுவலர்கள் முனிரத்தினம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post நத்தம்பேடு பகுதியில் ₹5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nathampedu ,Tiruvallur ,District ,Nathamedu ,Thiruvallur taluk ,Thiruvur Kuruvattam ,
× RELATED இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்கூட்டியே அறிய செயலி: கலெக்டர் தகவல்