×

பழநி அ.கலையம்புத்தூரில் உலக நலன் வேண்டி ருத்ர ஹோமம்

பழநி, மே 15: பழநி அருகே அ.கலையம்புத்தூரில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு உலக நலன் வேண்டியும், மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் ருத்ர ஹோமம் நடந்தது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்களை வைத்து கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ர ஹோமம், வசோர்தாரா ஹோமம் போன்றவை நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு  கைலாசநாதசுவாமி மற்றும்  கல்யாணி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பழநி அ.கலையம்புத்தூரில் உலக நலன் வேண்டி ருத்ர ஹோமம் appeared first on Dinakaran.

Tags : Rudra Homam ,Palani A. Kalaiyambuthur ,Palani ,A. Kalaiyambuthur ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு