×

ரூ.20ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி

புதுடெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்,” ரூ.20ஆயிரம்கோடி செலவழித்த பின்னரும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?, வாரணாசியில் தத்தெடுத்த கிராமங்களை பிரதமர் கைவிட்டது ஏன்? மகாத்மாவின் மரபை அழிப்பதில் பிரதமர் உறுதியாக இருப்பது ஏன்? 2014ம் ஆண்டு வாரணாசி வந்தபோது பிரதமர் புனித கங்கை நீரை சுத்திகரிப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஆபரேஷன் கங்காவை நமாமி கங்கா என்று மாற்றிவிட்டார். வரி செலுத்துபவர்களின் ரூ.20ஆயிரம் கோடி பணம் எங்கே சென்றது? வாரணாசியில் தனது தோல்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.20ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி appeared first on Dinakaran.

Tags : Ganga ,Congress ,Modi ,New Delhi ,Varanasi Lok Sabha ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன?