- குளித்தல் கிரிமினல்
- குலிதலை
- தலைமை குற்றவியல் நீதிமன்றம்
- நீதிபதி
- சோர்னா குமார்
- குளிக்கலை இணைந்த நீதிமன்றம்
- கரூர் மாவட்டம்
- குளுதலை வக்கீல் சங்கம். ...
- குளுதலை குற்றவியல் நீதிமன்றம்
- தின மலர்
குளித்தலை, மே 14: கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற வருடாந்திர ஆய்வு பணிக்காக மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் வக்கீல்கள் இடையே பேசினார். இதில் வக்கீல்கள் ராஜு, ஜெயராமன், மது, காஜா மொய்தீன், பிரபு, முருகானந்தம், ஜாபர் சேட், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் வீரமணி நன்றி கூறினார்.
The post குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வருடாந்திர ஆய்வு appeared first on Dinakaran.