×

ஒட்டன்சத்திரத்தில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், மே 14: ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் தரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சசி, டிஎஸ்பி முருகேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி, முதலுதவி வசதிகள், பள்ளி வாகன ஓட்டுநர்களின் பணி அனுபவம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு குறைபாடு உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் தனியார் பள்ளி வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : School Vehicles Safety Advisory Meeting ,Ottanastra ,Ottansatram ,Taran ,District Attorney ,Sasi ,DSP ,Murukesan ,Fire ,Officer ,Rajendran ,Dinakaran ,
× RELATED ஜெலட்டின் குச்சிகள் வெடித்து...