திருப்பூர், மே 14: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வெண்கலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்.விவசாயி.சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் வெண்கலபாளையத்தில் இருந்து கொடுமணல் ரோட்டில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். உடனடியாக ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் ஊத்துக்குளி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
வெண்கலபாளையத்தில் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிக்கு எதிராக கலெக்டரிடம் புகார் அளித்து வந்தேன். இதனால் அந்த குவாரிக்கான நடைசீட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்லையில் கடந்த 1ம் தேதி எனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா திருடப்பட்டது. மேலும் எனது வீட்டிற்கு அருகே குமாரசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த சிசிடிவி கேமரா கடந்து 8ம் தேதி திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்தும் குமாரசாமி மனைவி லட்சுமி ஊத்துக்குளி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கல்குவாரி நிர்வாகத்தினர் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக சந்தேகப்படுவதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடராஜன் புகார் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கொலை செய்ய முயற்சிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு appeared first on Dinakaran.