×

அரசு பஸ்சில் பயணித்த வியாபாரியிடம் தங்க நகைகள் திருடிய 3 பேர் கைது

பாலக்காடு, அக். 24: திருச்சூர் அருகே குண்டுக்காட்டை சேர்ந்தவர் ஜிபி. இவர் தங்க நகை வியாபாரி. இவர் கடந்த சில நாட்கள் முன்பு அரசு பஸ்சில் குற்றிப்புரத்திலிருந்து திருச்சூர் நோக்கி பயணம் செய்துள்ளார். அப்போது கைவசம் வைக்கப்பட்டிருந்த பையில் இருந்து 1172 கிராம் தங்க நகைகள் திருட்டுப்போனது. இதுகுறித்து சங்கரம்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஜிபி புகார் மனு அளித்திருந்தார். இதன்படி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்புப்படை அமைத்து தங்க நகை திருடியவர்களை தேடி வந்தனர். போலீசார் சி.சி.டி.வி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அரசு பஸ்சிலிருந்து எடப்பாளில் மூவர் இறங்குவது பதிவாகியிருந்தது. இதனை வைத்து கொள்ளையர்களான எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோஸ் (எ) நிஷார் (50), நெல்லிக்கல்லை சேர்ந்த நவுபல் (34), கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியை சேர்நத பாபு (எ) ஜெயாநந்தன் (61) ஆகியோரை சங்கரம்குளம் போலீசார் பிடித்து கைது விசாரணை நடத்தினர். இதில் அரசு பஸ்சில் வியாபாரியிடம் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளிலும் சம்பந்தமுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ்சில் பயணித்த வியாபாரியிடம் தங்க நகைகள் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kundukkad ,Thrissur ,Korippuram ,
× RELATED தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி