×

நீலகிரி காலை நேரங்களில் பனி மூட்டம் குளிரால் ஊட்டி மக்கள் அவதி

 

ஊட்டி, அக். 29: நீலகிரி மாவட்டத்தில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நீர் பனி விழும். தொடர்ந்து, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும். அதன்பின், பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் ஊட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் தினமும் உறைபனி காணப்படும். இதனால், மாலை 4 மணிக்கு மேல் குளிர் வாட்டத்துவங்கும். அதேபோல், அதிகாலை நேரங்களிலும் குளிர் வாட்டியெடுக்கும்.

மேலும், பகல் நேரங்களில் பனி மூட்டமும் காணப்படும். இந்நிலையில், நீலகிரியில் மழை குறைந்துள்ள நிலையில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால், குளிர் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும், நிழல் தரும் இடங்கள், தாழ்வான இடங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தால் பலரும் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

The post நீலகிரி காலை நேரங்களில் பனி மூட்டம் குளிரால் ஊட்டி மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Nilgiris ,Dinakaran ,
× RELATED பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில்...