ஐதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐதராபாத் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் மாதவி லதா தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்த இஸ்லாமிய பெண்ணிடம் அவரது புர்காவை விலக்கி முகத்தை காட்டும்படி கூறி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும் போலீசாரிடம் முழுமையாக சோதனை செய்த பின்னரே வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பாஜ வேட்பாளரின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாலக்பேட் காவல்நிலையத்தில் பாஜ வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஐதராபாத் கலெக்டர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘பாஜ வேட்பாளர் மாதவி லதா மீது மாலக்பேட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post புர்காவை விலக்கி முகத்தை காட்டும்படி கூறியதால் ஐதராபாத் பாஜ வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு appeared first on Dinakaran.