×

உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளிப்படிப்பை 10-ம் வகுப்பில் பாதியில் நிறுத்தியுள்ளார். பெற்றோர் இறந்ததால், தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள். சிறுமியின் நடத்தையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வயிறும் பெரிதாகி வந்தது. இதனால் தாத்தா, பாட்டி இருவரும் சிறுமியை உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியைஅதே பகுதியை சேர்ந்த ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (21), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15, 16 வயதுடைய சிறுவர்கள் என 9 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. 17 வயது சிறுமி வேலை தேடி வந்தபோது 14 வயது சிறுவன் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும் நண்பர்களான 8 பேருக்கும் சிறுமியை அறிமுகப்படுத்தி பலாத்காரம் செய்ய வைத்துள்ளான். சிறுமிக்கு அவ்வப்போது செலவுக்கு பணமும் கொடுத்துள்ளனர். சிறுமியின் தோழியான 13 வயதான மற்றொரு சிறுமியையும் வேலை வாங்கி தருவதாக கூறி 9 பேரும் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே 2 சிறுமிகளையும் இந்த கும்பல் சீரழித்து வந்துள்ளது. சிறுமியின் கர்ப்பத்தால் இந்த சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மற்ற 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி, இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் உடுமலை சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tiruppur ,Udumalaya ,
× RELATED தேர்தல் முடிவடைந்ததால் திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்