×
Saravana Stores

மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறல்; தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பீர்பும் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இளம்பஜார் வாக்கு சாவடி மையத்தில் நடைபெறும் வாக்கு பதிவை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் நேரலையாக கண்காணிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதில், வாக்கு மையத்தில் இருந்து நபர் ஒருவர் வெளியே வருவதும், பின்னர் உள்ளே செல்வதும் என பார்க்கப்பட்டது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறல்; தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Election Commission ,Kolkata ,Election Commission of West Bengal ,Chief Electoral Officer ,Ubang Bazar Polling Station ,Birbum Lok Sabha Constituency ,West Bengal… ,Polling Station ,Dinakaran ,
× RELATED டிராவல் பண்ணது ஒரு குத்தமாயா… பெண்கள்...