×

பாகிஸ்தான் வைத்திருக்கும் அணுகுண்டுக்கு ராகுல் பயப்படலாம் ஆனால், பாஜ பயப்படாது: அமித்ஷா பேச்சு

பிரதாப்கர், மே 13: ‘பாகிஸ்தான் வைத்திருக்கும் அணுகுண்டுக்கு ராகுல் காந்தி வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் பாஜ பயப்படாது’ என அமித்ஷா பிரசாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், ‘பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட நாடு, அதோடு அவர்கள் அணுகுண்டையும் வைத்திருக்கிறார்கள். முட்டாள்தனமான நபர் யாராவது அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் வந்து அணுகுண்டை பயன்படுத்தினால் அதன் விளைவை இந்தியாவும் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்றார். இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘ அணுகுண்டுக்கு ராகுல் காந்தி வேண்டுமானால் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் நிச்சயம் மீட்போம்’’ என்றார்.

The post பாகிஸ்தான் வைத்திருக்கும் அணுகுண்டுக்கு ராகுல் பயப்படலாம் ஆனால், பாஜ பயப்படாது: அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Pakistan ,BJP ,Amit Shah ,Pratapkar ,Rahul Gandhi ,Senior ,Congress ,Mani Shankar Aiyar ,
× RELATED பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி...