×

மணல் லாரிகள் சிறைபிடிப்பு

பல்லடம், மே 12: பல்லடம் அருகே தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக மண் எடுத்து செல்லாத லாரிகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று சிறைபிடித்தனர். மண், மணல், எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். ஆனால், பல வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் வாகனத்திற்கு பின்னால் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை பொங்கலுார் அவிநாசிபாளையம் அருகே, பாதுகாப்பற்ற முறையில் எம்-சாண்ட் ஏற்றி சென்ற லாரியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சிறைபிடித்து அவிநாசிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.உரிய பாதுகாப்புடன் செல்லுமாறு போலீசார் எச்சரித்து லாரியை அனுப்பினர்.விவசாயிகள் கூறுகையில், மண், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மணல் லாரிகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tamil Nadu Farmers Protection Association ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...