×

மாநகராட்சி பகுதியில் தூர் வாரும் பணிகள்; ஆணையாளர் ஆய்வு

 

திருப்பூர், மே 22: திருப்பூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை தூர்வாரும் பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகு மழைநீர் தானாகவே வடிந்தது. சில பகுதிகளில் உறிஞ்சி குழாய் மூலம் வெளியேற்றப்பட்டது.

இருப்பினும் சில பகுதிகளில் பாதாள சாக்கடைகளுக்குள் மழை நீர் சென்றதால் ஆங்காங்க அடைப்பு ஏற்பட்டது.‌ இதனால் கழிவு நீர் வெளியேறியது. மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் பாதாள சாக்கடை அடைப்புகளை விரைவில் சரி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கேரிபாளையம் சாலை, மகாவிஷ்ணு நகர், கொங்கு மெயின் ரோடு மற்றும் அணைப்பாளையம் ஆகிய பகுதிகளில் அடைப்புகளை சரி செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் பணிகள் நடைபெற்று வருவதை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன், உதவி போலீஸ் கமிஷனர் செந்தில் விநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post மாநகராட்சி பகுதியில் தூர் வாரும் பணிகள்; ஆணையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்